விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படம் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. அக்டோபர் 9-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சி. பிரேம்குமார் இயக்கிய இப்படத்தில் ராமச்சந்திரன், ஜானகிதேவி கதாபாத்திரங்களில் இருவரும் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தாவின் இசையில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளன.
96 திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது
Source: OneIndia Tamil