டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 6 முதல் தொடங்கியுள்ளது; நவம்பர் 5 இரவு 11:59 வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு ஜனவரி 10, 2027 அன்று நடைபெறும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி குறைந்தபட்ச கல்வித் தகுதி.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: 6,574 பணியிடங்களுக்கு அறிவிப்பு
Source: Zee Tamil News