நடிகர் சிபிராஜ் தனது பிறந்தநாளான இன்று அண்டர்டாக் ஃபிலிம்ஸ் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படமான புரொடக்ஷன் நம்பர் 1-ல் அவர் கதாநாயகனாக நடித்து தயாரிக்கிறார். ஜீப்ரா புகழ் இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியுள்ளது. கதை, பிற நடிகர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
பிறந்தநாளில் சிபிராஜ் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்
Source: Filmibeat Tamil