தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களைக் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. EMIS இணையதளத்தில் பதிவான மாணவர் எண்ணிக்கை மற்றும் ஆகஸ்ட் 1, 2026 வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆசிரியருடன் உபரி, ஆசிரியரின்றி உபரி மற்றும் கூடுதல் தேவைப் பணியிடங்கள் துல்லியமாகக் கணக்கிடப்பட வேண்டும். தவறான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என தொடக்கக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு தொடக்கம்
Source: Zee Tamil News