தொகுப்பூதிய செவிலியர்கள் 2,500 பேரை பணி நிரந்தரம் செய்யும் அரசாணை ஓரிரு வாரங்களில் வெளியாகும் என சுகாதார அமைச்சர் அருண்ராஜ் உறுதியளித்துள்ளார். டிண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டக் குழுவினர் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜை உடன் அழைத்து வர விரும்பியதால் பேச்சுவார்த்தை தாமதமானதாகக் கூறினார். 21 அம்ச கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
தொகுப்பூதிய செவிலியர்கள் 2,500 பேர் பணி நிரந்தரம்: அமைச்சர் உறுதி
Source: ABP Nadu