தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். இதை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறுவர்; தவறினால் நன்னடத்தை விதி மீறல் என கருதப்படும். 2010ஆம் ஆண்டு ஏ.கே. ராஜன் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு
Source: ABP Nadu