சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் அக்டோபர் 10-ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மற்றும் கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் இங்கு மேற்கொள்ளப்படும். நியாய விலைக் கடைகள் மற்றும் தனியார் சந்தை குறைகளையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். OTP சேவைக்காக பதிவு செய்யப்பட்ட கைபேசியை எடுத்துச் செல்ல வேண்டும்.
சென்னையில் அக்டோபர் 10-ம் தேதி சிறப்பு ரேஷன் குறைதீர் முகாம்
Source: Asianet News Tamil