தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் 19,656 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசாணை எண் 17 (30.01.2026) படி, மொத்த ஊதியம் ரூ.6,700 ஆக நிர்ணயிக்கப்பட்டு, நிலுவைத் தொகை தவணை அல்லது ஒட்டுமொத்தமாக வழங்கப்படும். ஓய்வு வயது 60 ஆகவும், புதிய நியமனங்கள் மாவட்ட ஆட்சியர் இசைவுடன் மட்டுமே செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு
Source: Zee Tamil News