தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, நியாய விலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் இந்த விற்பனை நடைபெறும். சென்னையில் அக்டோபர் 10 முதல், பிற மாவட்டங்களில் அக்டோபர் 11 முதல் விற்பனை தொடங்குகிறது.
நியாய விலைக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை
Source: ABP Nadu