விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் திருமாவளவன், காலம் மாறும்போது கூட்டணியை தக்கவைக்கும் முயற்சியை திமுக மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தனக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் குறித்த வீடியோவை வைத்து சமூக வலைதளங்களில் தன்னை இழிவாகப் பேசியதாகவும் அவர் கூறினார். கூட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு, எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக கூட்டணியை தக்கவைக்க முயலவில்லை: திருமாவளவன் குற்றச்சாட்டு
Source: News18 Tamil