வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்துவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகல், சிறப்பு தீவிர மறுஆய்வு நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக தலைமை நீதிபதியிடம் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். கட்சி, சாதி, மத பேதமின்றி அனைவரும் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வாக்கு திருட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நோக்கி ராகுல் காந்தி பேரணி
Source: news18.com