லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் 28 வயது கஃபே உரிமையாளர் சிவா சர்மா அடுக்குமாடி பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அவரது தாயார் ரஞ்சனா சர்மாவின் புகாரின் அடிப்படையில் காதலி ஷ்ரத்தா துபே, அவரது சகோதரி ராஷ்மி, ஓட்டுநர் டேனிஷ் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு மிரட்டியதாகவும், உடலில் காயங்கள் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணக் காரணம் தெளிவாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
லக்னோ கஃபே உரிமையாளர் பால்கனியில் விழுந்து மரணம்; காதலி மீது கொலை வழக்கு
Source: malaimurasu.com