வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை நான்கு வாரங்களுக்குள் இந்து சமய அறநிலையத் துறையிடம் வழங்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டே ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் விவரம் தாமதமாவதை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பெருவெளி வேலி நாசம் தொடர்பான வழக்கில் நவம்பர் 5ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
வள்ளலார் சபை நில ஆக்கிரமிப்பு: ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Source: Kalki Online