உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதில் வி த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவந்து, பின்னர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு உள்ளாட்சி முதல் சட்டமன்றம் வரை மாற்றத்தை வழங்குவதே தனது அமைப்பின் நோக்கம் என்று அவர் கூறினார். 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகு இயக்கம் அரசியல் கட்சியாகத் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் வி த லீடர்ஸ் போட்டியிடும்: அண்ணாமலை அறிவிப்பு
Source: OneIndia Tamil