ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்குச் செல்லவும், அதற்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் மற்றும் விஷ்ணு வினோத் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவும் இரு அணிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 17 வீரர்கள் தக்கவைப்பு காலக்கெடு நெருங்குவதால் இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இரு அணிகளும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற வாய்ப்பு
Source: Dinakaran