புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினமும் ஆறு காட்சிகள் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதிகளிலும் இந்த அனுமதி பொருந்தும்.
திரையரங்குகளில் நாளொன்றுக்கு 6 காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி
Source: Cinema Vikatan