தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜெய் ஜெய் கணேசா’ திரைப்படம் தமிழில் வெளியாகத் தயாராகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை விஜய் மாதவன் தயாரிக்கிறார். நயன் சாரிகா, பிரகதி ஸ்ரீவத்சவா நாயகிகளாக நடிக்க, உதய் பொம்மி செட்டி இயக்கியுள்ளார். இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்.
ஆனந்த் தேவரகொண்டாவின் ‘ஜெய் ஜெய் கணேசா’ தமிழில் வெளியாகிறது
Source: Filmibeat Tamil