தீபாவளிக்காக சென்னையிலிருந்து 9 லட்சம் பேர் பயணம்

தீபாவளிக்காக சென்னையிலிருந்து 9 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் ஒன்பது லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலும் பயணியர் கூட்டம் அலைமோதியது. தாம்பரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெளிநாடுகளிலிருந்து விமான நிலையத்துக்கு வரும் பயணியர் எண்ணிக்கையும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

Source: Dinamalar

More in Top Stories

Read the live feed on ZapIndies