பழங்குடியின மொழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 16 வார சான்றிதழ் வகுப்புகள் நடத்த தமிழக அரசு ரூ.89.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசின் 2026-27 மானியக் கோரிக்கை அறிவிப்பைத் தொடர்ந்து, பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் மூடுல் அடிப்படையிலான கற்றல் மேலாண்மை முறையில் இவ்வகுப்புகள் நடைபெறும். நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஏழு பழங்குடியினர் சமூகங்களின் மொழி, கலாச்சார பாரம்பரியம் ஆவணப்படுத்தப்படும்.
பழங்குடியின மொழி வகுப்புகளுக்கு ரூ.89.5 லட்சம் ஒதுக்கீடு
Source: News7 Tamil