கர்நாடகாவில் பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஏழு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட 63 மாதிரிகளில் ஒன்றில் 31.2 சதவீதம் வரை எத்தனால் இருந்ததாக அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டை IOCL, BPCL, HPCL ஆகிய நிறுவனங்கள் மறுத்து, மாதிரி சேகரிப்பு முறையில் குறைபாடு இருப்பதாகக் கூறி, இரு தரப்பும் பங்கேற்கும் மறுபரிசோதனையைக் கோரியுள்ளன.
பெட்ரோலில் அதிக எத்தனால்: கர்நாடக குற்றச்சாட்டை எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு
Source: malaimurasu.com