போலந்தின் கிராகோவ் நகரின் மையச் சந்தைச் சதுக்கத்தில் சனிக்கிழமை பிற்பகல் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர். நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இரண்டு காவலர்கள் காயமடைந்து, ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 24 வயதான போலந்து நாட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போலந்தின் கிராகோவ் நகரில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
Source: IBC Tamil