வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக TABCEDCO சார்பில் சிறப்பு கடன் மேளா நாளை (13ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வேலூர், பாரதி நகர், குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் இம்மேளா நடைபெறும். தனிநபர் தொழில் கடன், சுயஉதவிக் குழு கடன், கல்வி கடன் உள்ளிட்ட திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலூரில் TABCEDCO சிறப்பு கடன் மேளா நாளை நடக்கிறது
Source: Zee Tamil News