சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக தவெக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானத்தை அதிமுக எதிர்த்தது. அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது அரசியல் காரணங்களுக்காக அவசரமாக கொண்டு வரப்படுவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டின் 7.18% விகிதாச்சார பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளதாகவும், அதன்படி மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 59 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தவெக அரசின் தனித் தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது
Source: Dinakaran