லண்டன் லார்ட்ஸில் நடந்த தி ஹண்ட்ரட் 2026 இறுதிப் போட்டியில் ட்ரென்ட் ராக்கெட்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மான்செஸ்டர் சூப்பர்ஜெயன்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. சஞ்சீவ் கோயங்காவுக்குச் சொந்தமான அந்த அணி, ஜோஸ் பட்லர் தலைமையில் வென்றது. டிம் சீஃபர்ட் 72 ரன்கள் விளாச, 98வது பந்தில் இலக்கை எட்டியது. முன்னதாக, 2022, 2023ல் இறுதிக்கு முன்னேறியும் தோற்ற நிலையில், புதிய பெயருடன் முதல் சீசனிலேயே கோப்பையை வென்றது.
மான்செஸ்டர் சூப்பர்ஜெயன்ட்ஸ் தி ஹண்ட்ரட் கோப்பையை வென்றது
Source: myKhel tamil