மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விமல் எலாச்சி விளம்பரத்திற்காக ஷாருக் கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், ஆணையர் துகாராம் முண்டே, விதிமீறலில் ஈடுபடுவோர் யாரும் தப்ப முடியாது என எச்சரித்துள்ளார். இந்த விளம்பரம் தடைசெய்யப்பட்ட பான் மசாலாவின் மறைமுக விளம்பரமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தவறான விளம்பரங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளை மேற்கோள்காட்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விமல் விளம்பரம்: நடிகர்களுக்கு நோட்டீஸ்; யாரும் தப்ப முடியாது என எஃப்டிஏ எச்சரிக்கை
Source: news18.com