அணுமின் விபத்துகளுக்கான இழப்பீட்டுத் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயித்துள்ள சாந்தி சட்டம், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட நீதிமன்றங்களுக்குத் தடையாக இருக்க முடியுமா என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தச் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் அமர்வு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.
அணுமின் விபத்து இழப்பீட்டு உச்சவரம்பு குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Source: Dinamani