யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறும் 'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா' மூன்றாவது நாளாகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் பாரம்பரிய உணவுகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப் பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடையாளத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது நாளாக யாழ். உணவுத் திருவிழா களைகட்டியது
Source: Nakkheeran