இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகளை அந்நாடு ஆராய்ந்து வருகிறது. அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சீனாவின் ஈஹாங் நிறுவனம் இரண்டு பயணிகள் செல்லக்கூடிய மின்சார செங்குத்து புறப்பாடு விமானங்கள் குறித்த விபரங்களை வழங்கியது. சுற்றுலா மட்டுமின்றி, அவசரகால மீட்பு மற்றும் கடல்சார் பயன்பாடுகளுக்கும் இந்த சேவை பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை அறிமுகம் குறித்து ஆய்வு
Source: Hindu Tamil Thisai