சென்னை உள்பட இந்தியாவின் பல இல்லத்தரசிகள், தலையில் கேமரா பொருத்தி வீட்டு வேலைகளைச் செய்து, AI ரோபோக்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்காக ஒரு மணி நேரத்திற்கு ₹250 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த வீடியோ தரவுகள் டெஸ்லா, ஃபிகர் போன்ற நிறுவனங்களின் மனித உருவ ரோபோக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கினாலும், எதிர்காலத்தில் எளிய தொழிலாளர்களின் வேலைகளை பறிக்கும் அபாயமும் உள்ளது.
வீட்டு வேலைக்கு AI ரோபோ பயிற்சி: மணிக்கு ₹250 ஊதியம்
Source: Kalki Online