பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் (பி.சி.ஐ.) இணைத் தலைவர் ஒய்.ஆர். சதாசிவ ரெட்டி, தலைவர் மனன் குமார் மிஸ்ரா மீது நிதி முறைகேடு, சந்தேகத்திற்குரிய நியமனங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, 15 நாட்களுக்குள் பதவி விலகக் கோரியுள்ளார். ரூ.150 கோடி பரிமாற்றம், சட்டக் கல்லூரிகளிடம் பணம் வசூல், நல்சார் பல்கலைக்கழக மாணவர்களை இணைக்க மறுப்பு உள்ளிட்ட புகார்களை அவர் எழுப்பியுள்ளார். சிறப்புக் கூட்டம், சிறப்புத் தணிக்கைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பி.சி.ஐ. தலைவர் மிஸ்ரா பதவி விலக வேண்டும்: இணைத் தலைவர் கடிதம்
Source: news18.com