இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரருமான கரன் சர்மா (38) அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உத்தர பிரதேச டி20 லீக்கில் ஆகஸ்ட் 25 அன்று நடைபெறும் போட்டி இவரது கடைசி ஆட்டமாக இருக்கும். ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக கோப்பை வென்ற முதல் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் சிஎஸ்கே வீரர் கரன் சர்மா ஓய்வு அறிவிப்பு
Source: myKhel tamil