மத்திய அரசு ஈபிஎஸ் ஓய்வூதியத்திற்கான சம்பள வரம்பை ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 35 ஆண்டு பணிக்காலம் முடிந்த ஊழியர்களின் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ₹7,500-லிருந்து ₹12,500 ஆக உயரும். குறைந்தபட்ச ஓய்வூதியமும் 66% வரை அதிகரிக்கும். புதிய வரம்பின் கீழ் ஊழியர் மற்றும் நிறுவனம் இரண்டும் பங்களிப்பு செலுத்தியிருந்தால் மட்டுமே முழ ஓய்வூதியம் கிடைக்கும்.
ஈபிஎஸ் சம்பள வரம்பு ₹25,000 ஆக உயர்வு: ஓய்வூதியம் 66% வரை அதிகரிக்கும்
Source: The Economic Times Tamil