சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி ஹவுதி அமைப்பு ஏவிய ஏவுகணையை சவூதி வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக முறியடித்து அழித்தது. கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் அருகே எரிபொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை எழுந்தது. யான்புவில் அராம்கோ வசதிகள் உள்ளிட்ட இடங்களையும் ஹவுதிகள் இலக்கு வைத்ததாக கூறப்படுகிறது. ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய நாடுகள் தாக்குதலை கண்டித்துள்ளன.
ரியாத் விமான நிலையம் அருகே ஹவுதி ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு
Source: news18.com