மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விற்பனையில் 2000 ரூபாய்க்கு மேல் பில் எனில் UPI ஏற்கப்படாது என டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதிக தொகை UPI பரிவர்த்தனைக்கு 0.4% வரை MDR கட்டணம் வசூலிக்கப்படுவதும், சர்வர் கோளாறால் பணம் நின்றுபோவதும் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரொக்கம் அல்லது கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.
2000 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் பில்: மத்திய பிரதேசத்தில் UPI தடை
Source: The Economic Times Tamil