கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமிலா ஜெயராஜ், வீட்டில் சிறிய அளவில் தொடங்கிய தேங்காய் எண்ணெய் தயாரிப்பை வளர்த்து, தற்போது தேங்காய் பால், எக்ஸ்ட்ரா விர்ஜின் எண்ணெய், சட்னி, ஊறுகாய் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து மாதம் சராசரியாக ரூ.20 லட்சம் விற்பனை செய்கிறார். 2012-ல் தொடங்கிய இவரது நிறுவனம் 2016 முதல் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது; தற்போது 13 நிரந்தர பணியாளர்கள், அவர்களில் எட்டு பெண்கள்.
தேங்காய் பொருட்கள் மூலம் மாதம் ரூ.20 லட்சம் விற்பனை செய்யும் கேரள இல்லத்தரசி
Source: Asianet News Tamil