உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட மானிய எல்பிஜி சிலிண்டர் பயனாளர்கள் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இல்லையெனில் மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காது. செப்டம்பர் 19 நிலவரப்படி 27.43 கோடி நுகர்வோர், அதாவது 89.9 சதவீதம் பேர், சரிபார்ப்பை முடித்துள்ளனர். ஒரே நபர் பல இணைப்புகள் மூலம் கூடுதல் மானியம் பெறுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் மானியத்திற்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்
Source: Kalki Online