அண்ணாமலை தலைமையிலான வீ தி லீடர்ஸ் அமைப்பின் ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவுக்கான பொதுச்செயலாளராக கே.சுவாமிநாதன் (அஸ்பயர் சுவாமிநாதன்) நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்பின் மக்கள் தொடர்பு பணிகளையும் ஊடக செயல்பாடுகளையும் மாநில அளவில் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு.நாகராஜன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊடகப் பிரச்சாரங்களை முடுக்கிவிட சுவாமிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வீ தி லீடர்ஸ் ஊடகப் பொதுச்செயலாளராக சுவாமிநாதன் நியமனம்
Source: NewsBytes Tamil