உத்தரப் பிரதேசம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்படும் என்று பாஜக கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் தெரிவித்துள்ளார். பூர்வாஞ்சல் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டால் அதன் முதல் முதலமைச்சர் ராஜ்பர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அவர் கூறினார். 2027 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தியோரியாவில் நடந்த கூட்டத்தில் இதைத் தெரிவித்த அவர், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் உட்பிரிவு கோரிக்கையையும் வலியுறுத்தினார்.
உத்தரப் பிரதேசம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்படும்: ராஜ்பர்
Source: news18.com