தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அழகு நிலையம் மற்றும் ஸ்பாவில் போலீசார் நடத்திய சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 பெண்கள் மீட்கப்பட்டனர். சாரங்கபாணி தெற்கு வீதியில் உள்ள அழகு நிலையத்தில் 4 பெண்களும், நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் உள்ள தங்கும் விடுதி ஸ்பாவில் 6 பெண்களும் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்பகோணத்தில் அழகு நிலையம், ஸ்பாவில் சோதனை: 10 பெண்கள் மீட்பு, 3 பேர் கைது
Source: ABP Nadu