போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்குவது, பிறருக்கு மாற்றுவது, ஐஎம்இஐ எண்ணை மாற்றுவது ஆகிய குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என புதிய தொலைத்தொடர்புச் சட்டம் எச்சரித்துள்ளது. சத்தீஸ்கரில் ஒரு மொபைல் கடைக்காரர் 25 போலி சிம் கார்டுகளை விற்றது கண்டுபிடிக்கப்பட்டு கடை தடை செய்யப்பட்டது. சிம் கார்டுகள் யாருடைய பெயரில் உள்ளதோ அவர்களே குற்றத்திற்குப் பொறுப்பாவார்கள் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
போலி சிம் கார்டு: 3 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் அபராதம்
Source: sathiyam.tv