வாகன ஓட்டிகள் தங்கள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் அல்லது டேக் ஐடியை மாற்றாமல் வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் நடைபெற்ற உலகளாவிய ஃபின்டெக் திருவிழாவில் இந்த OneTag சேவையைத் தொடங்கி வைத்தார். NHAI-யின் ராஜ்மார்க்யாத்ரா செயலியில் வாகன எண்ணைப் பதிவு செய்து, OTP மூலம் சில நிமிடங்களில் வங்கியை மாற்றலாம். IHMCL மற்றும் NPCI இணைந்து உருவாக்கியுள்ள இந்த சேவையில், மாற்றிய பின் ஆறு மாதங்களுக்கு மீண்டும் வங்கியை மாற்ற முடியாது; KYC விவரங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஃபாஸ்டேக் வங்கி மாற்ற OneTag அறிமுகம்
Source: Kalki Online