அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் திட்டப் பிரிவு இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடேலா பொறுப்பேற்க உள்ளார். நாடு முழுவதும் மருத்துவமனை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அவர் மேற்பார்வையிடுவார். குழுமம் ரூ. 8,600 கோடி மதிப்பில் பெரும் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவைகளை எளிய முறையில் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே தனது நோக்கம் என உபாசனா தெரிவித்துள்ளார்.
அப்பல்லோவில் உபாசனா காமினேனிக்கு புதிய பொறுப்பு
Source: Filmibeat Tamil