ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: டிஜிட்டல் சான்றுகளை விரைந்து ஆய்வு செய்ய வேண்டும் - வேல்முருகன்

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: டிஜிட்டல் சான்றுகளை விரைந்து ஆய்வு செய்ய வேண்டும் - வேல்முருகன்

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கின் டிஜிட்டல் சான்றுகளை விரைந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் அதிகாரத் தலையீடு இன்றி அறிவியல் மற்றும் சட்டரீதியான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர், துணைபோனவர்கள், மறைமுகத் தொடர்புடையவர்கள் அனைவரின் பங்கும் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும், கைப்பற்றப்பட்ட காணொளிகள் மற்றும் மின்னணுச் சாதனங்கள் முறையான தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Source: Daily Thanthi

More in Crime

Read the live feed on ZapIndies