இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீட்சில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை 6 விக்கெட்டுக்கு 321 ரன்கள் குவித்தது; குசால் மெண்டிஸ் சதமடித்தார். பின்னர் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 305 ரன்களே எடுத்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலைக்கு வந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை 16 ரன்கள் வெற்றி
Source: Maalaimalar