BRICS நாடுகளிடையே மனநல சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய வலையமைப்பை இந்தியா முன்னெடுக்கிறது. பெங்களூரு NIMHANS இதன் ஒருங்கிணைப்பு மையமாக செயல்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநல சேவைகளை இணைத்தல், சுகாதார பணியாளர்களின் திறனை அதிகரித்தல், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்த கூட்டு ஆய்வுகள் மேற்கொள்வது ஆகியவை முக்கிய நோக்கங்களாகும். 2017-ல் இந்தியாவில் சுமார் 19.73 கோடி பேர் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
BRICS மனநல வலையமைப்பு: NIMHANS ஒருங்கிணைப்பு மையம்
Source: malaimurasu.com