செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவுள்ள மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தத்தின் போது, பொதுமக்கள் எந்த வங்கி ஏடிஎம்மையும் கட்டணமின்றி பயன்படுத்தலாம் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்பது தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படும் எனவும், டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி வேலைநிறுத்தம்: அனைத்து ஏடிஎம்-களிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்
Source: Kalki Online