தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 89,955 தங்க மோதிரங்களை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. ஒரு கிராம் எடையுடன் 22 கேரட் தூய்மையில், பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை மற்றும் 6 இலக்க எச்.யூ.ஐ.டி. எண் கொண்ட இந்த மோதிரங்கள், அதிக பிரசவங்கள் நடைபெறும் 107 அரசு தாய்சேய் நல மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளன. திட்டத்தின் கீழ் மொத்தம் 4,41,667 மோதிரங்கள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தாய்மாமன் திட்டம்: முதற்கட்டமாக 89,955 தங்க மோதிரங்கள் தயார்
Source: Daily Thanthi