வாகன அபராத நிலுவைகளை மின்சார கட்டணத்துடன் இணைத்து வசூலிக்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு பரிந்துரைத்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு, இ-சலான் வழங்குவது மட்டும் போதாது, வசூலில் கவனம் தேவை என்றது. நாடு முழுவதும் சுமார் ரூ.20,000 கோடி அபராத நிலுவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அபராதம் செலுத்தாத வரை ஆர்.சி., உரிமம் புதுப்பித்தல் மற்றும் உரிமை மாற்றத்திற்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.
வாகன அபராத நிலுவை மின்சார கட்டணத்துடன் இணைக்க உச்ச நீதிமன்றம் பரிசீலனை
Source: news18.com