கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் AIS-140 தர ஜிபிஎஸ் கருவி பொருத்தி MiMaS தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட 676 வாகனங்களில் 50-ல் மட்டுமே ஜிபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளதால், காலக்கெடு 30.09.2026 வரை நீட்டிக்கப்பட்டது. அக்டோபர் 1 முதல் இணக்கமில்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பத்மஜா எச்சரித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் ஜிபிஎஸ் இல்லாத கனிம வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
Source: Zee Tamil News