தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நாளை (செப்டம்பர் 30) தாராபுரத்தில் ரோடு ஷோ நடத்தி, 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கோவை விமான நிலையம் முதல் தாராபுரம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கனரக வாகனங்களுக்கு மட்டும் மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கோவையில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல்: நாளை விஜய் பிரச்சாரம், கோவையில் போக்குவரத்து மாற்றம்
Source: NewsBytes Tamil